தமிழகத்தில் முஸ்லிம்கள்

ஆசிரியர்: எஸ்.எம்.கமால்

Category தமிழ்த் தேசியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 180
ISBN9788177202458
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது. இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான , இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவாதிக்கிறது.இதை எஸ். எம். கமால் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த முஸ்லிம் வருகையில் தொடங்கி, தமிழக முஸ்லிம்களிடையே துலுக்கர், சோனகர், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, தக்னிகள், பட்டாணிகள் போன்ற பெயர்கொண்ட சமுதாயங்களாக எவ்வாறு உருக்கொண்டன என்பதுவரை 1 தனித்தனி இயல்களில் விவரிக்கிறார். அத்துடன் வணிகம், அரசியல், பண்பாடு, மொழி போன்றவற்றினூடாகத் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பையும் அவர்கள் உள்ளூர்ப் பண்பாட்டுடன் எவ்வாறு ஒத்திசைவு கொண்டனர் என்பதையும் இலக்கியம், வரலாறு, செப்பேடுகள் போன்ற ஏராளமான சான்றுகளுடன் எளிய நடையில் விளக்குகிறார்,இதன்மூலம் முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்களை வரலாறு எழுதியலில் இன்னும் நுட்பமாக விவாதிக்க முடியும் என்பதை இந்நூலில், எஸ். எம். கமால் நிரூபித்துள்ளார்.இதனால் தமிழக முஸ்லிம்கள் பற்றிய ஓர் அசலான பார்வையைத் தருகிறது இந்நூல். மேலும் முஸ்லிம்கள் பற்றிய ஆக்கங்களில் ஓர் அகவயமான எழுத்து முறையை வைக்கிறது. இதன்மூலம் இந்த வகைமையில் இது முதல் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய நூலாகத் திகழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.எம்.கமால் :

தமிழ்த் தேசியம் :

அடையாளம் பதிப்பகம் :