தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு

ஆசிரியர்: சி.இளங்கோ

Category கல்வி
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 288
ISBN978-93-92213-21-2
Weight300 grams
₹230.00 ₹218.50    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்திய இலக்கியங்களில் தொன்மையானவையாக வேத இலக்கியங்கள் கருதப்படுகின்றன. ஆரிய இனக்குழுவால் எழுதப் பட்ட இவ்விலக்கியங்களின் காலகட்டம் கி.மு. 1,200 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வேதங்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலகட்டத்தில் பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் முதலானவையும் எழுதப்பட்டன. வேத நூல்களில் முதன்மையானதாக ரிக் வேதம் உள்ளது. ரிக் வேதத்தை ஒட்டியே யஜூர், சாம, அதர்வ வேத நூல்களும் எழுதப்பட்டன. ஒவ்வொரு வேதமும் உள்ளடக்கத்திலும் கருத்திலும் மாறுபட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளன.
ரிக் வேதப் பாடல்கள் இயற்கை நெறிப் பாடல்களாகவும் தன் தேவைகளைக் கடவுளிடம் கேட்டு யாசிக்கும் பாடல்களாகவும் உள்ளன. இதில் இந்திரன், அக்கினி முதலான கடவுள்கள் அதிகமாக வழிபடப்படுகின்றனர்.
ரிக் வேதத்திலிருந்து மாறுபட்டது யஜூர் வேதம். இது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்கு முறைகளைப் பற்றிப் பேசுகின்றது. சாம வேதம், ரிக் வேதப் பாடல்களின் கருத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டு, இசையோடு பாடும் பாடல் முறையில் அமைந்துள்ளது. மேலும் அதர்வ வேதம் பில்லி, சூனியம், மந்திரதந்திரங்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இளங்கோ :

கல்வி :

அலைகள் வெளியீட்டகம் :