தமிழகப் பழங்குடிகள்
ஆசிரியர்:
பக்தவத்சல பாரதி
விலை ரூ.330
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1106-6749-4551-4304
{1106-6749-4551-4304 [{புத்தகம் பற்றி தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு உலகம் குழந்தையாய் இருந்தபோது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை , நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் வாழும் தொதவர், இருளர், முதுவர், பளியர், குறும்பர் உள்ளிட்ட 37 பழங்குடிகள் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார் பக்தவத்சல பாரதி. ஆதியில் பெண்ணே முதல் விவசாயி; அவள் பயன்படுத்திய முதல் விவசாயக் கருவி இன்று எவ்வாறு தாய்த்தெய்வங்கள் கையில் , சூலாயுதமாக மாறியிருக்கிறது பழங்குடிகள் இன்றும் மூதேவியைக் கும்பிடுகிறார்கள், இறப்பவர்களுக்குக் கல்மாடம் அமைக்கிறார்கள், உடன்போக்கில் மணம் செய்கிறார்கள், முலைவிலை கொடுத்து மணப்பெண் பெறுகிறார்கள், மறுபங்கீட்டுப் பொருளாதார முறையைக் கண்டுபிடித்தவர்களும் அவர்களே. சங்க இலக்கியத்தின் முன்வடிவங்களை வாய்மொழியாகவும் சாதியமைப்பின் தொல் வடிவத்தையும் கொண்டிருக்கிறார்கள்.இப்படியாக, தமிழகத்தில் வாழும் பழங்குடிகளின் சமூகம் பண்பாடு, மரபு எனப் பல்வேறு தளங்களிலும் விரிகிறது இந்த நூல். அத்துடன் நாகரிக வளர்ச்சியின் விளைவாகப் பழங்குடிகளின் வாழ்வில் காலனியம், உலகமயம், தனியார்மயம் முதலான போக்குகள் நிகழ்த்திவரும் தாக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது, இதன்மூலம் தன் வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்கிறது. பழங்குடி மக்கள் குறித்து ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
<br/>} {பதிப்புரை தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றையும் அறுபடாத தொடர்ச்சி யையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும். இந்த 'நீண்ட நெடிய அறுபடாத தொடர்ச்சியில் அதன் சமூக-பண்பாட்டு உருவாக்கமும் அசைவியக்கமும் பல்வேறு சமூக முறைகளை உருவாக்கியுள்ளன. பழங்குடிச் சமூக முறை தொடங்கி தொழிற்சமூக முறை வரை அதன் படிமலர்ச்சி அனைத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. இந்நிலை யில் உலகளாவிய அளவில் பார்க்கும்போது இதன் மிக நீண்ட நெடிய தொடர்ச்சி ஒரு 'முழுமுதலான மாதிரியாக அமைகிறது. இத்தகு முழுமுதலான மாதிரியை முன்வைத்து உலகளாவிய சமூகங்களை ஒப்பு நோக்கி ஆராய்வதற்குத் தமிழ்ச் சமூகம் ஒரு நல்ல மாதிரியாகவும் அமைகிறதமனித சமூகத்தின் நடத்தை முறைகளை ஒழுங்கமைக்கும் உலகளாவிய விதிகளைக் காண்பதும், அந்தந்தச் சமூகத்திற்குரிய விதிமுறைகளைக் காண்பதும் மானிடவியலர்களின் முக்கிய முயற்சியாக இருந்து வருகிறது. மானிடவியலர்களாகிய நாங்கள் இத்தகு முயற்சியைப் பழங்குடி மக்களிடமிருந்து தொடங்குகிறோம். காரணம் இத்தகு பூர்வகுடிச் சமூகங்கள்தாம் மனித சமூகத்தில் தோன்றிய ஆரம்பகால சமூக நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இத்தகு தொடக்ககட்ட நிறுவனங்களால் ஆக்கப்பட்ட சமூகம் 'எளிமைச் சமூகம்' (simple society) என உருவெடுத்தது. அதன் சமூக நிறுவனங்கள் சுருக்க மானவையாக, எளிமையானவையாக இருந்தன.இத்தகைய எளிமையான, தொடக்ககட்ட, சுருக்கமான கூறுகளிலிருந்து இன்றைய கூட்டுத்தன்மையுடைய நவீன சமூகங்கள் தோன்றி வளர்ந்தன. எளிமையிலிருந்து கூட்டுத்தன்மை உருவான முறையை அறிவதற்கு எளிமையிலிருந்து ஒவ்வொரு கட்டமாக ஆராய வேண்டியது அவசியமாகும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866