தமிழகம் ஊரும் பேரும்
₹230.00 ₹218.50 (5% OFF)
தமிழகம் ஊரும் பேரும்
₹275.00 ₹261.25 (5% OFF)

தமிழகம் ஊரும் பேரும்

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 376
Weight250 grams
₹140.00 ₹119.00    You Save ₹21
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புக்கள் பலப்பல. அவைகளுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பலதிறம். பலதிறத்துள் விராவியும், தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான்போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதற்றோ ? 'ஊரும் பேரும்' என்னும் இந்நூல் வரலாற்றின் பாற்பட்டது. இவ்வரலாறு தமிழ்நாட்டின் ஊரையும் பேரையும் விளக்குங்கலங்கரை. 'ஊரும் பேரும்' என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்த பொருண்மையுடையது ; சுரங்கம் போன்றது. 'முழுமுதற்பொருள் ஊரில்லாதது - பேரில்லாதது' என்று ஆன்றோர் பலர் அருளிப்போந்தனர். ஊர் பேரில்லாத முழுமுதற்கு வழிபாடு நிகழ்ந்துவருகிறதா? இல்லையா? அதற்கு வழிபாடு நிகழ்ந்தே வருகிறது. எப்படி? ஊர் பேராலேயே வழிபாடு நிகழ்ந்து வருகிறது. 'ஒருநாமம் ஒருவரும் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் - திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ' எனவருஉந் திருவாசகம் ஈண்டுக் கருதற்பாலது. ஊரும் பேரும் இறைக்குந் தேவையாதலை ஒர்க. ஊர் பேர் மாண்பே மாண்பு! நாம் வாழும் இவ்வுலகம், இற்றைக்குச் சுமார் இருநூறு கோடி ஆண்டுக்கு முன்னர், பெரிய செஞ்ஞாயிற்றினின்றும் பிளவண்டு வீழ்ந்த ஒரு சிறிய துண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

ஆய்வு நூல்கள் :

பாரி நிலையம் :