தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் (பதின்மூன்று உரையாடல்கள்)

ஆசிரியர்: யமுனா ராஜேந்திரன்

Category நாவல்கள்
Publication தடாகம் வெளியீடு
FormatPaper Back
Pages 324
Weight400 grams
₹240.00 ₹180.00    You Save ₹60
(25% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மார்க்சியக் கோட்பாட்டாளர்களான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள். உளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதிய நீக்கம் குறித்து உரையாடுகிறார். ஈழப் பதிப் புலக முன்னோடியான இ.பத்மநாபர் ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும், ஈழக் கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல் கள் குறித்தும், ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும், தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியடோர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும், நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள்.படிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில், என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார். கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யமுனா ராஜேந்திரன் :

நாவல்கள் :

தடாகம் வெளியீடு :