தமிழர் வரலாறு - கிழாரியம் முதல் முதலாளியம் வரை
ஆசிரியர்:
குணா
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88?id=1136-6505-0843-2888
{1136-6505-0843-2888 [{புத்தகம் பற்றி ஆரிய-திராவிட வரலாற்றியலைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுத் தமிழிய வரலாற்றியலுக்குக் கால்கோளிட முனைந்துள்ள எனக்குத் தனி அடையாளத்தைத் தந்த 'வடுகப் படையெடுப்புக் கோட்பாடு' முழுமையாகக் கருக்கொண்டிராத நிலையில் எழுதப் பட்ட கட்டுரையே தமிழர் வரலாறு - கிழாரியம் முதல் முதலா வியம் வரை என்னும் இக்கட்டுரை.
<br/>வெற்றிச்செல்வன் இதைத் திருத்தித் தருமாறு கேட்டபோது, இக்கட்டுரையில் வேண்டாத பழைய ஆரிய-திராவிட வரலாற்றியலின் எச்சங்கள் தொக்கி நிற்கக் கண்டேன், கட்டுரையைத் திருத்த முனைந்தபோது, இதுவரையில் அறிந்திராத நன்னர் என்ற அரசக் குடியைப் பற்றிய ஒரு விளக்கம் கிடைத்தது. நன்னர் என்ற தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழிகளில் நந்தர் என்றானது. நந்தர்கள் ஒருகால் மிகப் பெரிய அரசக்குடியாயிருந்ததை அயோத்திதாசர் குறிப்பால் உணர்த்தி வந்தார். அந் நன்னர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை வெளிப்பாடாக்க வல்ல தடயம் இக் கட்டுரையைத் திருத்துகையில் எனக்குக் கிடைத்தது.
<br/>மக்கள் எளிதில் புகவியலாதிருந்த இத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதியில் வடுகர் என்னும் அநாகரிகர்கள் பண்டு வாழ்ந்துவந்தனர், சோணையாறு கங்கையில் கலக்கும் இடமாகிய பட்டினத்தில் (பட்னாவில்) கி. மு. 5ஆம் நூற்றாண்டில் நன்னர்(நந்தர்)கள் அமைத்த வடதமிழ் அரசை வடுக அநாகரிகர்கள் வீழ்த்தினர் என்பது என் துணிபு, செருமானிய அநாகரிகர்கள் பண்டை உரோம அரசை வீழ்த்தியதைப் பற்றிய ஒப்பியல் நோக்கு அதற்குத் துணை நின்றது. நந்தர்களான நன்னர்களின் வரலாற்றை இக்கட்டுரை அறிய உதவும் என்ற எண்ணத்தில் இக் கருதுகோளை முன்வைக்கின்றேன். இதற்குத் தம்பி வெற்றிச்செல்வன் ஒரு தூண்டுகோலாயிருந்தார் என்பதை நன்றியுடன் பதிய விழைகின்றேன்.
<br/>தமிழரின் இழந்த வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் இந் நூலை ஆக்கமுடன் திறனாய்க!</br>} {பதிப்புரை முன்னுரை தமிழின விடுதலை அரசியல் கருத்தரங்கில் 13.01.1994 அன்று படிக்கப்பட்ட இந்தக் கட்டுரை, நாகரிக மென்பது வடக்கிலிருந்து தெற்குநோக்கி வந்ததென்னும் மிகப் பெரும் பொய்யை வீழ்த்திய தேவநேயப் பாவாணரின் குமரிக்கண்டக் கோட்பாட்டை நிலை நிறுத்துகின்றது. அத்துடன், இரு பெரிய மாயைகளையும் உடைத்தெறிய இது முற்படுகின்றது. ஆரியமும் பார்ப்பனியமும் பிராமணியமும் வெவ் வேறென்பது ஒருபுறமிருக்க, வந்தேறிய அருக, புத்த சமயங்களின் வாயிலாகவே ஆரியக் கொள்கை தமிழகத்திற்குள் ஊடுருவிய உண் மையையும் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. பார்ப்பனியத்தை எதிர்த்துவந்ததாயினும், ஆரியக் கொள்கையின் பெரிய கூறாகவே புத்தமதம் என்றும் இருந்துவந்துள்ளதைக் காட்டுவதன் வாயிலாக, அப் புத்தநெறியைப் பற்றிய இன்றைய மாயையை இக் கட்டுரை, உடைக்கப் பார்க்கின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866