தமிழாய்வு : புதிய கோணங்கள்

ஆசிரியர்: அ.பாண்டுரங்கன்

Category ஆய்வு நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
FormatPaper Back
Pages 240
ISBN978-93-85471-91-9
Weight300 grams
₹200.00 ₹160.00    You Save ₹40
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




அறிவியல் மாணவனாகக் கல்லூரியில் பயின்ற பேராசிரியர் அ. பாண்டுரங்கன் (1936) சென்னை மாநிலக் கல்லுாரியில் பட்டமேற்படிப்பில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழ்த்து! கற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுப் பொற்பதக்கங்கள் பெற்றார் (1960). - புதுவை அரசின் தார் கல்லுாரியில் பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்ற பாண்டுரங்கன் (1961) புதுவை அரசு கலைக்' கல்லுாரிகளில் 1986, டிசம்பர் முடியப் பல்வேறு துறைப் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றினார். கல்லூரியில் கற்பித்த நாட்களில், தமிழ் இலக்கியத்தை, இலக்கிய இலக்கணப் புலமையோடு நின்று விடாமல், மொழியியல், கல்வெட்டியல், வரலாற்றியல், சமூகவியல், மானிடவியல் போன்ற பிற துறை நூல்களையும் பயின்று தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். முனைவர் பட்ட ஆய்வுக்கு வாக்கமே தரப்படாத காலத்தில் (1975 வரை. ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொண்டு மதுரைப் பல்கலைக்கழகத்தில் கம்ப ராமாயணத்தில் ஆய்வு செய்து (1970_74) முனைவர் பட்டம் பெற்றார்.' மதுரையில் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் மாலை நேரக் கல்லுாரியில் இரண்டு ஆண்டுகள் மொழியியல் பயின்று தேர்ச்சி பெற்றார். திராவிட மொழியியல் கழகம் நடத்திய மொழியியல் கோடை வகுப்புகளிலும் பங்கேற்றுத் தன்மொழியியல் புலமையை வளர்த்துக் கொண்டார். காரைக்கால் அரசுக் கல்லூரியில் பணியாற்றியபோது, அல்லியான்ஸ் பிரான்சேஸ் நடத்திய மாலை நேர வகுப்புகளில் பயின்று பிரஞ்சு மொழியில் பட்டயம் பெற்றார்.புதுவையில் தொடங்கப்பட்ட மத்தியப் பல்கலைக் கழகத்தின் (1986) சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப் புலத்தின் தலைவராகவும் பேராசிரியராகவும் பொறுப்பேற்று, அத்துறையைக் கட்டமைத்தார். தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, தமிழ் ஆராய்ச்சி வரலாறு, தொகையாக்கம் போன்ற புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் அறிவுத் தேட்டத்தை வளர்த்தார். 1997 ஆம் ஆண்டு ஓய்வு! பெறும் வரை பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், எழுதி வெளியிட்டார். இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சாரத். திணைக்களத்தின் அழைப்பை ஏற்றுப் பலமுறை இலங்கைக்குச் சென்று கருத்தரங்குகளில் பங்கேற்றார். தன் எண்பத்தொன்றாம் அகவையிலும் படித்துக்கொண்டும் ஆய்வு செய்துகொண்டும் வருகின்றார். 'இதுவரை பன்னிரண்டு ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய நூல்கள் அனைத்தும் சிந்தனையைக் கிளறுபவையாகவும், தரமானதாகவும் இருப்பதால், அவை தொடர்ந்து திருத்திய பதிப்புகளாக வெளிவந்துகொண்டுள்ளன. இந்நூல் பேராசிரியர் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதி வெளியிட்ட தமிழாய்வு : புதிய கோணங்கள் என்னும் நூலின் திருத்திய பதிப்பாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :