தமிழிசைத் தளிர்கள்

ஆசிரியர்: நா.மம்மது

Category கட்டுரைகள்
Publication தமிழோசை பதிப்பகம்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉயிரினங்களும், மானிட இனமும் தோன்றுவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்பு இவ்வுலகம் தோன்றி இருந்தது. உயிரினங்கள் இல்லையென்றாலும், அப்பொழுது இப்பூவுலகில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளும், ஆர்ப்பரிக்கும் கடல்களும், எட்ட நின்று கொட்டி விழும் அருவிகளும் இருந்தன.
எனவே உலகெங்கும் பேரண்டம் முழுவதும்கூட ஓர் அசைவு இருந்தது. அணுவும் அசைந்தது. அணு உள்ளும் அசைவு இருந்தது.
எங்கு அசைவு, பெயர்ச்சி, நகர்வு இருக்கிறதோ, அங்கு தாளமும் உருவாகிவிடுகிறது.
கொட்டு, பாணி, தூக்கு, அசை, அளவு, சீர், தாளம், முழக்கு என்று நம் தமிழ்ப் பனுவல்கள் குறிப்பிடுவது இந்த தாளத்தைத்தான்.
பறவைகள், வண்டினங்கள், விலங்குகளிடமிருந்து பாட்டையும், பண்களையும் அறியும் முன்பே, தாளத்தை முதலில் அறிந்திருந்தான் ஆதி மனிதன்.
பாடல் என்ற பாட்டு மொழியும் அதன்பின்பு தோன்றிய 'உரைநடை' என்ற பேச்சு மொழியும் தோன்றுவதற்கு முன்பே தாளம் பட்ட கூத்து மொழி இருந்தது.
காலப்போக்கில் இயல், இசை, கூத்து என்ற வரிசையில் சொல்லாடல் நிலைத்து விட்டது. ஆனால் கூத்து, இசை, இயல் என்பதே இயற்கையான படிநிலை.
ஆதி மனிதனின், கூத்து மொழியில் சைகை இருந்தது. தாளம் இருந்தது. சைகையும் தாளத்தை ஒத்தே இருந்தது. அதாவது கூத்து மொழி சைகை மொழியாக, தாள மொழியாக இருந்துள்ளது.


வளர்கிற வரை குடிக்கிற பால் தாய்ப்பால்.
வளர்ந்த பிறகும் ஆயுள் நெடுக அருந்துகிற பால் இசைப்பால்.
இது வியர்வையுடன் இணைந்து பிறந்தது உழைப்பால்.
இதன் வேர்வை வரை சென்று ஆய்வுகள் செய்து வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தொடர்ச்சியாய்க் கிடைத்திருக்கும் தமிழிசை அறிஞர் மம்மது அவர்களை வியந்து போற்றுகிறோம் அவர் இசைப் புலமையின் மீதுள்ள மதிப்பால்...

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

கட்டுரைகள் :

தமிழோசை பதிப்பகம் :