தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்)

ஆசிரியர்: நா.மம்மது

Category ஆய்வு நூல்கள்
Publication இன்னிசை அறக்கட்டளை
FormatHard Bound
Pages 498
Weight1.31 kgs
₹600.00 ₹540.00    You Save ₹60
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகளஞ்சியம் என்ற நிலையில் சொற்களுக்குரிய பொருள் எந்தெந்த நூல்களிலெல்லாம் காணப்படுகிறதோ அவையெல்லாம் அரிதின் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி பொதுவாசிப்பாளர், தமிழிலக்கியம் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், இசையும் இயலும் பயிலும் மாணவர்கள், பயிற்றுவிக்கும் பிசிரியர்கள் ஆகிய அனைவர்க்கும் பயன்படும் வகையில் அ, சுகப்பற்றுள்ளது.பேரா. முனைவர் தொ. பரமசிவன், ஆட்சிக்குழு பரரபினர், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகரவரிசையிலுள்ள சொற்பொருள் விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. - ரா.முலைவர் தி. அருட் செல்வி, இசைத் துறை, அவை மலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்,

தமிழ்மொழி இலக்கியம் 20 நாற்றாண்டுக்காலத் தொன்மையும் தொடர்ச்சியும் உடையது, ஆனால் இந்த இலக்கியப் பரப்பினையும் இதன் ஆழத்தினையும் அளந்தறியும் கருவி நூல்கள் தமிழில் போதுமான அளவு பிறக்கவில்லை . கருவி நூல்கள் என நாம் குறிப்பிடுவனவற்றுள் முதன்மையானது அகராதி நூல்களாகும். அண்மையில் கிரகோரி ஜேம்ஸ் என்ற அமெரிக்கர் தமிழ் அகராதிகளின் வரலாறு (A History of Tamil Dictionaries) என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். தொல்காப்பிய உரியியல் தொடங்கி ஆராயும் இந்த நூல் இந்தியாவிற்கு வெளியேயும் உள்ள 14 நாடுகளின் நூலகங்களைப்பார்த்து ஆக்கப்பட்டது. உருசிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ஆக்கம் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சமய அகராதியின் பெயர் நம்புபவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமான அகராதி' (A Dictionary of Believers and Non -Believers ) என்பதாகும். ஐரோப்பியர்களின் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு அறிவியல் கருவிகளோடு இந்த வகையான. கருவி நூல்களும் காரணம் என்பதை நாம் மறந்து விடலாகாது. . இப்போது நா. மம்மது அவர்களால் ஆக்கப் பெற்று வெளிவரும் இந்த அகராதியின் பெயர் தமிழிசைப் பேரகராதி என்பதாகும். ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்பதோடு அமையாது பொருள் விளக்கத்தோடும் போதிய எடுத்துக்காட்டுகளோடும் அமைவதால் இது 'பேரகராதி' எனப்பெயர் பெறுகிறது. இந்த அகராதியைப் பயன்படுத்துவோர் மனங்கொள்ள வேண்டிய சில செய்திகளை இனிப் பேசலாம். முதற்கண் இந்த அகராதி எல்லோரும் பயன்படுத்தும் மொழி அகராதி அன்று, ஓரளவு இசையார்வமும், இசையறிவும், இசையாராய்ச்சி உணர்வுடையவர்களும் பயன் படுத்த வேண்டி, 01 அகராதி இது. மறைந்துபோனதாகக் கருதப் பெறும் தமிழிசைச் செல்வத்தை 'இலக்கியத் தொல்லியல் ஆய்வு செய்து மீட்டெடுத்துத் தந்துள்ள அகராதி இது. இந்த அகராதியினை ஆக்கிய திரு. நா. மம்மது தமிழ்த் தொல்லிசை குறித்த பயற்சியுடன் ஆங்கில, இந்துத்தானி, அரபிய இசையும் அறிந்தவர்.ஏனைய அகராதிகளைப் போன்றே இந்த அகராதிலும் சொற்கள் அகர வரிசையில் திரல்படுத்தப் பட்டுள்ளன, சொற்பொருள் விளக்கம் தொல்காப்பியம் தொடங்கி நமது கால திரைப்படப் பாடல்கள் வரை நீண்டுள்ளது. வேறு வகையில் சொல்வதானால் இந்த அகராதி, காலத்தினைக் கிழித்தெறிந்து பொருள் தெளிவு காட்டுகிறது,

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

ஆய்வு நூல்கள் :