தமிழிசை வேர்கள்

ஆசிரியர்: நா.மம்மது

Category சிறுகதைகள்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaper back
Pages 146
ISBN978-81-942677-0-6
Weight400 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆபிரகாம் பண்டிதர் வழிநின்று தமிழிசையின் வேர்களைத் தோண்டி எடுத்து அதன் மறைக்கப்பட்ட அடையாளத்தைத் துலக்கித் தக்கவைக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அறிஞர்கள் பலர். குடந்தை சுந்தரேசனார், வீ. பரமசிவம்பிள்ளை காமாட்சி மகன் சுந்தரம் (வீ.ப.கா.சுந்தரம்) ஆகியோர் வரிசையில் இன்று நம்முடன் வாழ்ந்து வருபவர் மம்மது. தமிழிசையின் மீது மட்டுமின்றித் தமிழ்ப் பண்பாட்டின் மீதும், மொழியின் மீதும் மிகுந்த பற்றுடையவர். நபிகள் நாயகத்தைக் குறிக்கும் முகம்மது என்னும் பெயரைத் தமிழ் ஒலிப்பு மரபிற்கு ஏற்ப மம்மது என மாற்றிக்கொண்டவர். இவரின் உடன் பிறவாச் சகோதரரும் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உயர் அதிகாரியுமான இராசா முகம்மது அவர்களோ இன்னும் ஒரு படி மேலே சென்று தன் பெயரைத் தமிழ் வென்றி என ஆக்கிக்கொண்டவர். நிகழ்ச்சிக்கு அரை மணி முன் வரை 'பேண்ட், சர்ட்டு'டன் பாடகர்க்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போதிலும் மேடையில் தோன்றும்போது வேட்டி, சட்டையுடன் காட்சியளிக்கும் வழக்கமுடையவர் மம்மது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

சிறுகதைகள் :

யாழிசைப் பதிப்பகம் :