தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்:
குணா
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+-+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1652-3407-8208-1333
{1652-3407-8208-1333 [{புத்தகம் பற்றி .தமிழ்த் தேசியக் கொள்கை - ஒரு வரலாற்றுப் பார்வை என்னும் தலைப்பில் மீட்போலை சிறப்பு மலருக்கு நான் எழுதிய கட்டுரையை அம் மீட்போலை சுருக்கியே வெளியிட்டது. பின் னர், வெங்காலூர் இந்தியத் தொலைபேசித் தொழிலகத்தில் பணி புரியும் தமிழார்வலர்கள் 1986ஆம் ஆண்டில் அக் கட்டுரையை 40 பக்க அளவிலான ஒரு குறுநூலாக வெளியிட உதவினர். வெங் காலூர்த் திருராமபுரத்து உலகத் தமிழ்க் கழக அன்பர்களும்கூட அதற்குத் துணை நின்றனர். சென்னைப் பஃறுளி பதிப்பகம் 1992 ஆம் ஆண்டில் அதனுடைய இரண்டாம் பதிப்பினைக் கொணர்ந் தது. அந்தப் பதிப்பு, 51 பக்கங்களாக விரிந்தது. - வேலூர் ஊரீசுக் கல்லூரியில் மாணவனாக இருக்கையில், நான் பிறந்த கோலார் தங்கவயலில் 1958ஆம் ஆண்டளவில் பொது வுடைமைக் கருத்தியலாலும் இயக்கத்தாலும் ஈர்க்கப் பெற்றேன். மோயீசன் (மோசே) காட்டிய பொன்னுலகைப்போல் அப் பொது வுடைமை இயக்கம் எனக்குத் தென்படவே, கனவுலகத்திற்குள் புகு வதைப் போன்ற புத்துணர்வுடன் அதற்குள் மடமடவென அடி யெடுத்து வைத்தேன். 1964 ஆம் ஆண்டில் வெங்காலூரில் குடி யேறி மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து மிக முனைப்புடன் இயங்கிவந்தபோது, அந்தக் கட்சிக்குள்ளும் பிராம்ணியச் சாதிக்காழ்ப்புகளும், தமிழரெதிர்ப்பு உணர்வும் புதைந்து விரிந்து ஊன்றி நின்றதைக் கண்டு அதிர்ந்து போனேன்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866