தமிழீழம் நான் கண்டதும் என்னை கண்டதும்

ஆசிரியர்: ஓவியர் புகழேந்தி

Category அரசியல்
Publication தோழமை வெளியீடு
Pages N/A
Weight650 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும், அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்து கொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்களானால் நிச்சயமாக மன நிறைவு அடைவார்கள்.
பழ.நெடுமாறன் புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று ஓவியக்காட்சி நடத்தும் போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார். இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒரு பக்கம்தான், கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும், மறுபக்கம் ஆகும். புகழ் தமது நூலில் இருபக்கங்களையுமே நமக்குக் காணத்தருகிறார்.
தியாகு தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலைப் படித்தது, நமது வரலாற்றையும், வருங்காலத்தையும் பற்றி ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. ஓவியர் புகழேந்தியின் நூலும்காண்பதைத்தான் மையமாகக் கொண்டிருக்கிறது. 'கண்டது' காண்பதன் இறந்த காலம் தானே? ஓவியர் பலர் கண்கள் வழியாகக் காண்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

தோழமை வெளியீடு :