தமிழ்க் காப்பியங்கள்
₹110.00 ₹104.50 (5% OFF)

தமிழ்க் காப்பியங்கள்

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 208
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘தமிழ்க் காப்பியங்கள்' என்னும் இப்புத்தகம் சென்னை ஸர்வ கலாசாலையில் நான் தமிழ் ஆராய்ச்சி மாணாக்கனாக இருந்த காலத்தில் செய்த ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டது காப்பிய இலக்கணங்களில் வரலாற்றையே தலைமையாகக் கொண்டது.
தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கணங்களின் வளர்ச்சி முறை ஆகியவை தனித்தனியே ஆராய்ச்சி செய்தற்குரியன. தமிழ் இலக்கணம் நாளடைவில் விரிந்து கொண்டே வருகின்றது. அதன் பிரிவுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியே பல கிளைகளை உடையதாக விரிகின்றது. தொல்காப்பியத்தில் உள்ள எழுத்திலக்கணத்திலும் சொல்லிலக் கணத்திலும் காணப்படாத பல புதிய அமைப்புக்கள் பின்பு புகுந்தன பல பழைய மரபுகள் வழக்கொழிந்தன. அவ்வாறே பொருள், யாப்பு என்பவற்றிலும் உண்டான வேறுபாடுகள் பல. அணியிலக்கணம் தனிப்பிரிவாகத் தொல்காப்பியத்திற் சொல்லப்படவில்லை. வடமொழி வின் தொடர்பு மிகுதியான பின்னரே அதனைத் தனியே வரையறை செய்யும் நூல்கள் தமிழில் எழுந்தன. ஆயினும் பழங்காலத்து இலக்கணங்களில் அணியிலக்கணத் தொடர்புடைய செய்திகள் பல உண்டு. அவை நாளடைவில் பெருகி உருப்பெற்றன.
தமிழ் இலக்கணப் பிரிவுகளில் ஒவ்வொன்றின் வரலாறும் தனித்தனியே ஆராய்ந்து அமைத்தற்குரியதேயாகும். அவற்றுள் அணியிலக்கண வரலாற்றை ஒருவாறு எடுத்துக்காட்டுவதே இகட்டுரையின் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி வா ஜகநாதன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :