தமிழ்ப் பெண்புலி

ஆசிரியர்: நிரோமி டி சோய்ஸா

Category மகளிர் சிறப்பு
Publication உமா பதிப்பகம்
FormatPaper back
Pages 239
Weight250 grams
₹200.00 ₹150.00    You Save ₹50
(25% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஸ்ரீலங்கா அரசு ராணுவத்துடன் பல்லாண்டுகளுக்கு நீடிக்கப்போகும் குருதிப் போரில் தமிழ்ப் புலிப்படையின் ஒரு சிறிய பிரிவாக 1987 கிறிஸ்துமசுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பதுங்கியிருந்தவர்களில் 17 வயது நிரோமி டி சோய்ஸாவும் ஒருத்தி. அவளுடன் வாழ்நாட் தோழியான 17 வயது அஜந்தியும் கூட இருந்தாள். இந்தப் பதின்வயதினர் தங்கள் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை அதிர்ச்சியிலாழ்த்திவிட்டுத் தமிழ்ப் புலிகளின் முதல் மகளிர் படை உறுப்பினர்களாக ஆகிவிட்டிருந்தனர். நிரோமி குழுவினர் ஆளுக்கொரு துப்பாக்கியும், சயனைட் குப்பியும் ஏந்தி, யுத்தத்தின் கொடுமைகளை மட்டுமின்றிப் பட்டினி, நோய், புலிகளினிடையே வளர்ந்து வரும் இறுக்கம் ஆகியவற்றையும் காட்டில் தீரத்துடன் எதிர்கொண்டு வந்தனர். ஆனால் அவளால் அதற்கு மேலும் பொறுக்க முடியாத வகைகளில் பிறகு சம்பவங்கள் வெடித்தன. ஒரு கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த, நன்கு கல்வி பயின்ற, மத்திய வர்க்க, கலப்பினப் பெண் தமிழ்ப் புலிகளுடன் இணைந்து போர்புரிய எப்படி நேர்ந்தது? இன்று அவர் தன் கணவர், குழந்தைகளுடன் சிட்னியில் வசிக்கிறார். ஆனால் நிரோமி டி சோய்ஸாஒரு சாதாரணப் பெண்ணல்ல.இது அதை நிரூபிக்கும் உண்மைக் கதை!

உங்கள் கருத்துக்களை பகிர :
மகளிர் சிறப்பு :

உமா பதிப்பகம் :