தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category பொது நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 512
Weight600 grams
₹320.00 ₹272.00    You Save ₹48
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என் சிறு வயதில் இருந்தே நான் 'கல்கண்டு' வார இதழை ஆர்வத்துடன் படித்து வந்திருக்கிறேன். ‘கல்கண்டு' வருவதற்காக வாசலில் காத்துக்கொண்டு இருப்பேன். அத்தனை ஈடுபாடு அதைப் படிப்பதில்! அதில் படிப்பதற்கு சுவாரசியமான விஷயங்கள் நிறைய இருக்கும். வயது ஆன பிறகும் 'கல்கண்டு' படிப்பதை நிறுத்தவில்லை . காரணம், வயது வித்தியாசம் இல்லாமல் மூத்த தலைமுறையையும், இளைய தலைமுறையையும் தன் எழுத்தால் ஈர்த்திருக்கிறார் அதன் ஆசிரியர் தமிழ்வாணன். குறிப்பாக, 'கல்கண்டு' இதழில் வாசகர் கேள்விக்குத் தமிழ்வாணனின் பதில்கள் சுவையாக இருக்கும். எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது. அதை சுவாரசியமாகச் சொல்லும் திறமையும் அவரிடம் இருந்தது.
இந்தக் கேள்வி - பதில் பகுதியை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். எப்போது படித்தாலும் அதில் உங்களுக்குத் தேவையான செய்தி இருக்கும். அதனால்தான் டேக் கார்ப்பரேஷனின் ராமு என்டோமெண்ட்ஸ் ஆதரவில் இந்தத் தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூலைக் கொண்டுவருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

-ஆர்.டி.சாரி.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :