தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: மு.வரதராசன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 456
ISBN978-81-7201-164-4
Weight600 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பேச்சுவழக்கில் உள்ள இந்திய மொழிகளுள் தமிழ் மிகப் பழமையானது; மிகப் பழைய இலக்கியச் செல்வமும் உடையது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சி இம்மொழியில் உள்ளது. இத்தனை பக்கங்களில் அமைய வேண்டும் என்ற வரையறை காரணமாக, எல்லா நூல்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் போதுமான விளக்கங்கள் தர இயலாவிட்டாலும், இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் மாறுதல்களும் புதுப் போக்குகளும் சிறப்பியல்புகளும் ஆங்காங்கே தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தொடக்கத்தில் தமிழ் மொழியின் வரலாறு அறிமுகமாக அமைந்துள்ளது. இறுதியில் இக்காலத்து இலக்கியம் பல்வேறு துறைகளில் பெற்று வந்துள்ள வளர்ச்சியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்நூல் பயன்படுவதாகும்.
சாகித்திய அகாதெமியின் திட்டப்படி இந்நூல் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் தெலுங்கு, கன்னடம், ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகி உள்ளன. மற்ற மொழியார் தம்தம் மொழியின் வாயிலாகவே, தமிழ் இலக்கிய வரலாற்றைக் கற்று அறிவதற்கு இந்நூல் உதவுவதாகும். இதனால் ஏற்படும் மொழியுறவு, இலக்கிய ஆர்வம் கொண்ட உள்ளங்களைப் பிணைக்க வல்லதாகும். இத்தகைய உறவும் பிணைப்பும் நாட்டின் ஒற்றுமைக்கும் முன்றேற்றத்திற்கும் மிகத் தேவையானவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :