தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்

ஆசிரியர்: டாக்டர் க.அன்பழகன்

Category கட்டுரைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 171
Weight150 grams
₹33.00 ₹31.35    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனிதனை அடிமைத்தனத்தினின்றும் விடுதலை செய்வது பகுத்தறிவு; அதுவே - அவனது சூழ்நிலையின் தாக்கத்தால் இடம்பெறும் அறிவின் அடிமைத்தனத்தை அகற்றுகிறது! அதுவே - அவனுக்கு ஆசிரியனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது! அதுவே - அவனது உயர்வுக்குக் காரணமாவதால், அவன் பகுத்தறிவைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.“மூடநம்பிக்கை, பல தலைமுறையாக வருவதால், நம்முடைய பிறவியோடு ஒட்டி இருப்பதாகும்; அதை, ஓட்டிவிட்டோம்' என்று நாம் தீர்மானிக்கும் போதும், அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கி இருக்கும்; அதற்குக் கேடு இல்லை என்ற நிலையில் திடீரென்று வெளிப்பட்டு நிற்கும்” என்று, 'கதே' என்ற அறிஞன் கூறுவது முற்றும் உண்மையாகும்.எனவே, மனிதன், தனது நிலைத்த தோழனான பகுத்தறிவை எப்பொழுதும் சிந்தையில் கொள்வதோடு, பகுத்தறிவுக்குத் தனி உரிமை தந்து - அதன் வழி, அவன் ஒழுக வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

பூம்புகார் பதிப்பகம் :