தமிழ் விருந்து

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 112
ISBN978-93-80217-14-7
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இவ் வரலாற்றாலும் கரிகால் சோழனுடைய சரித்திரத்தாலும் தமிழ்நாட்டரசர்கள் போர்க்களத்தில் வீரப்புகழ் வாய்ந்து விளங்கினார்களென்ற செய்தி நன்றாகத் தெரிகின்றது. சோழ நாட்டுப் புலிக்கொடியைக் கரிகாற்சோழன் இமயமலையில் ஏற்றினான்; சேரநாட்டுச் செங்குட்டுவன் கற்பின் செல்வியாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சென்று சிலையெடுத்து வெற்றி வீரனாக மீண்டு வந்தான். இவ்வரசர்கள் தமிழ்நாட்டின் வீரப் புகழை விளக்கினார்கள். இவருக்குப் பின்னே வந்த கங்கை கொண்ட சோழன், குலோத்துங்கன் முதலாய மன்னர் நிகழ்த்திய அரும் பெரும் போர்களைத் தமிழ்ப் புலவர்கள் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள். கலிங்க நாட்டின் மீது குலோத்துங்கன் சேனாதிபதியாகிய கருணாகரன் படையெடுத்து, அந்நாட்டு அரசனை வென்று, வாகை மாலை சூடிய வரலாறு கலிங்கத்துப் பரணியில் இலங்குகின்றது. இவ்வாறு முற்காலத் தமிழ் மன்னரும், இடைக்காலத் தமிழ் மன்னரும் போர் முகத்தில் காட்டிய வீரம் இக்காலத்தினருக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுவதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :