தாயுமானவன்
₹160.00

தாயுமானவன்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 280
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேல மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் பிறகு ஊர் திரும்பும் கால் நடைகள் மாதிரி நகர்ந்து கொண்டிருந்தன.
பரமு நாற்காலியைத் தூக்கி இன்னும் வராண்டாவின் கைப்பிடிச் சுவருக்கு அருகே போட்டுக் கொண்டான். முடிந்தவரை வானம் முழுவதும் அங்கிருந்தே பார்க்க ஆசைப்பட்டான்.
தாம்பரம் தூங்க ஆரம்பித்து விட்டது. சென்னையும் அதன் சுற்றுப்புறமும் பத்து மணிக்கு அடங்கிவிடுகின்றன. பதினொன்றுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடுகின்றன. பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு ஊர் சின்ன பரபரப்பு காட்டும். புரண்டு படுத்துத் தோளைச் சொறிந்து எழுந்து ஒரு முடக்கு தண்ணீர் குடிக்கிற மாதிரி இரவுக் காட்சி சினிமா முடிந்த பிறகு கொஞ்சம் முனகும். இரண்டு மணிக்கு உலுக்கினாலும் எழுப்பாத தூக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :