தாயும் குழந்தையும்

ஆசிரியர்: சீதாலக்ஷ்மி

Category இல்லற இன்பம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹30.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தைகளுக்குப் பெற்றோரிடம் பிறவியிலேயே அன்பு ஏற்பட்டு விடுவதில்லை; அதைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது பெற்றோருடைய பொறுப்பாகும்; பெற்றவர்களைப் போலவே வளர்ப்பவர்களும் அன்பைப் பெற முடியும்; குழந்தையினிடம் நாம் பரிவு காட்டினால் அது நம்மிடம் அன்பு கொள்கிறது; எனவே தானாக ஏற்பட்டுவிடுமென்று இருந்துவிடாமல் அதை வளர்த்துப் பெருக்க ஆவன செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தையை வேண்டாததாகக் கருதினாலோ, சற்று இவப்புடன் நடத்தினால் குழந்தை அதனை உணர்ந்து கொண்டு விடுகிறது. வெறுப்பு, வெறுப்பையே வளர்க்கும்; தங்கள் குழந்தைகளை வெறுக்கக்கூடிய பெற்றோர்களும் இருப்பார்களா என்று கேட்கலாம். குழந்தைகள் அப்படித்தான் கருதுகின்றன; பெற்றோருக் கும் அன்பு இருக்கிறதென்பதைக் குழந்தை உணரும்படி செய்யாததே அதற்குக் காரணம். சிறு குழந்தையிலிருந்தே தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியிருந்தால் இம்மாதிரி எண்ண இட மேற்பட்டிருக்காது; தூக்கி வைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும் தவறென்று கருதுவோரும் உண்டு. இதனால் குழந்தையின் வளர்ச்சி தடைப்படு மென்பது அவர்கள் வாதம்; இது தவறாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சீதாலக்ஷ்மி :

இல்லற இன்பம் :

பாரதி பதிப்பகம் :