திம்ப சக்கரம் (துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவிடும்)

ஆசிரியர்: P.D.ஜெகதீஸ்வரன்

Category ஜோதிடம்
Publication அப்ஸரா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 240
Weight300 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நூல் பழங்கால ஜாதகாபரணம், ஹோரா ரத்னம் எனும் மூல நூல்களின் மறைப்பொருளாக துண்டி இராஜா மற்றும் பலபத்ரர் எனும் அருளாளர்களால் ஆழமான அரிய கருத்துக்கள் அடங்கிய இரகசியங்கள் முதன் முதலாக தமிழில் வெளிவந்த தனிப்பெருமை பெற்றது இந்நூல். இந்நூலில் குறிப்பிட்டுள்ளபடி பிறப்பின் ஆதாரமான இராசி சக்கரத்தை திம்ப சக்கரமாக மாற்றி அமைத்து ஆராய்ந்தால் எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடைகள் தெள்ளத் தெளிவாக விடை கிடைக்கும். இருளில் வழி தெரியாமல் தவிப்போர்க்கு பரிகாரங்ககளை கண்டறிந்து பலன் பெற்றிட வழி வகுத்து ஒளி கொடுத்து உள்ளளியை உணர்த்துவது இந்நூல். திம்ப சக்கரம் ஓர் அருமையான, முழுமையான பலன் உரைக்கும் முன்னிலை வகிக்க உதவும் நூல். இதில் ஏராளமான தகவல்கள் தாராளமாக பொதிந்துள்ளன. அவற்றை முழுமையாக படிப்பவர்களுக்கு கிரகங்களின் செயல்பாடுகள் தெள்ளத் தெளிவாக விளங்கும் தீர்க்க தரிசனம் பெற்றிட வழி வகுக்கும்.

திம்ப சக்கரத்தில் கல்வி நிலை கண்டறியும் நிலை, திம்ப சக்கரத்தில் நோய் கண்டறியும் முறைகள், திம்ப சக்கரம் மூலம் கோட்சார பலன்களை எளிய முறையில் கண்டறியும் வழிகள், திம்ப சக்கரம் மூலம் உபாசனை சித்தியாகும் வழிகள், திம்ப சக்கர உதாரண ஜாதகர்கள் மூலம் திம்ப சக்கர திசை, புத்தி பலன்களை எளிதில் கண்டறியும் வழிகள் எல்லாம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கோட்சார நிலைகளை வைத்து சூட்சும திம்ப சக்கரம் இராசி திம்ப சக்கரம் கணிக்கும் முறைகள் எளிய நடையில் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத திம்ப சக்கர சூட்சும இரகசிய பரிகார குறிப்புகள் அத்தனையும் முத்துக்களாக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மிக துல்லிய பலனைக் காண படைக்கப்பட்ட அரிய பொக்கிஷம் தான் திம்ப சக்கரம். பரிகாரங்கள் மூலம் பலன்களைக் காண பல வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. திம்ப சக்கரம் நூலை ஜோதிடர்கள் படிக்கும் பாக்யம் பெற்றால் தங்கள் திறமைக்கு மணிமகுடமாய், சிகரத்தின் ஜீவ ஒளியாய் திகழ முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளித்திடும் உன்னத நூல். இறைவன் வகுத்த நியதியை அறிந்து இரகசியமான விதியை மிகத் துல்லியமாய் உணர்த்துவது இந்நூல். ஜோதிடர்கள் இந்நூலைப் படித்து பலன் பெறுவதற்கு பாதை வகுத்திடுவது திம்ப சக்கரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
P.D.ஜெகதீஸ்வரன் :

ஜோதிடம் :

அப்ஸரா பப்ளிகேசன்ஸ் :