தியானம் ஒரு இந்தியப் புதையல்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 320
ISBN978-81-8402-867-6
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



துயரங்கள் ஒன்றும் உங்களை வதைக்கவில்லை. நீங்கள் தான் உங்கள் துயரங்களைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அகநிலைச் சார்ந்த கருத்துகள் உங்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கும் சமயத்தில், உங்கள் துயரங்களை உதறி எறிந்து விடமுடியும். தியானம் உங்களுக்குள் மலரும்போது தான் துயரங்களை உதற இயலும். காரணம், அப்போதுதான் நீங்கள் உங்களது வெறுமை நிலையை ரசிக்கத் தொடங்குவீர்கள். அதன்பின்னர், அது வெறுமை நிலையாக இருக்காது. வெறுமையும் ஒரு நேர்மறையான நறுமணத்தை பரப்பத் துவங்கும். அதன்பிறகு, அது எதிர்மறையானதாக இருக்காது.
இதெல்லாம் தியானம் நிகழ்த்தும் மாயாஜாலங்கள். இது உங்கள் வெறுமை நிலையை நேர்மறை நிறைவு நிலையாக மாற்றி, உங்களைத் திணறடிக்க வைத்துவிடும். வெறுமை நிலை, அமைதி நிலையாக, சாந்த நிலையாக, புனித நிலையாக, தெய்வீக நிலையாக மாறிவிடும். தியானத்தைக் காட்டிலும் மிகப்பெரிய மாயாஜாலம் வேறு எதுவும் கிடையாது. எதிர்மறை சக்தி, நேர்மறையாக மாறுகிறது. இருளாக இருப்பது வெளிச்சமாக மாறுகிறது. அதெல்லாம் தியானத்தின் விந்தைகளாகும். அது பயந்த சுபாவமுள்ள மனிதரை அச்சமற்ற தைரியசாலியாக மாற்றுகிறது. ஏகப்பட்ட முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டுக்கிடப்பவரை, பந்தங்களற்றவராக மாற்றுகிறது. இவை எல்லாம் தியானத்தின் மூலம் நடந்தேறுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :