தியா

ஆசிரியர்: பி.வி.சுகுமாரன்

Category அகராதி
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaper back
Pages 110
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பி.வி. சுகுமாரன் சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் 'தியா' எனும் சிறிய நாவல், சிறார் இலக்கியம் எனும் தீவில் கண்டடைய முடிகிற சில அபூர்வ பிரகாசங்களில் ஒன்றாகும்.
அரசுப் பள்ளிகள் உயர்தரமான கல்வியளிக்கும்போதும், இன்றும் நடுத்தரக் குடும்பத்தினரின் கனவுகளில், தங்கள் பிள்ளைகள் உயர்ந்த கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் காட்சிகள்தான் நிறைந்திருக்கின்றன. இந்த முரண்நகையை நாவலாசிரியர் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார்.
Corsord கட்டுப்பாடுகளின் அடைப்பட்ட அறைகளுக்குள் மூச்சுத்திணறும் பிஞ்சு
of om மனசுகளுக்கு, கல்வி பெரும்பாலும் அந்நியமாகிறது. தியாவும் தான் அகப்பட்டுக்கொண்ட சூழ்நிலையின் அழுத்தத்தால் கடும் மனப்பிரச்சினைகளுக்கு ஆளாகிறாள். கனவுச் சிறகுகளுடன் விசாலமான ஆகாயத்தை நோக்கிப் பறக்க வேண்டிய பருவத்தில், கட்டுப்பாடுகளையும் முடிவுகளையும் சுமந்துகொண்டு தங்கள் உலகத்துக்குள் மேலும் மேலும் சுருங்கும் குழந்தைகளின் நிலையைப் பற்றி, நாம் மிகவும் ஆழ்ந்த முறையில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.வி.சுகுமாரன் :

அகராதி :

பாரதி புத்தகாலயம் :