தியூப்ளே வீதி

ஆசிரியர்: இரா. முருகன்

Category கதைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 544
ISBN978-93-84149-77-2
Weight650 grams
₹550.00 ₹533.50    You Save ₹16
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆறு வருடம் முன்பு தினமணி கதிர் வார இதழில் 'நெம்பர் 40, ரெட்டைத் தெரு' என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். பயோஃபிக்ஷன் என்ற, வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலான புனைகதை அல்லது புனைகதையான வரலாறு அது. 1960-களில், தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறு நகரத்தில் இருந்த ஒரு பத்து வயதுப் பையனின் வாழ்க்கைதான் அந்தத் தொடர். நான்தான் அவன்.
'நெம்பர் 40, ரெட்டைத் தெரு' நூல் வடிவம் பெற்றது. அதன் பகுதிகள் குறும்படமாயின. நானும் அதில் நடித்தேன், வாழ்க்கை 1960-களிலேயே நின்றுவிட வில்லையே. அந்தப் பையன் வளர்ந்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். 1970-களில் அவனுடைய உலகம், அவனைச் சுற்றி இயங்கிய உலகம், பழகிய மனிதர்கள், நடந்த தெருக்கள் இதையெல்லாம் கற்பனை கலந்து பதிவு செய்யும் தொடர்தான் ‘தியூப்ளே வீதி', தியூப்ளே வீதியும் ரெட்டைத் தெருவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தவை. இப்போது இரண்டுமே பெயர் மாறி நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. முருகன் :

கதைகள் :

கிழக்கு பதிப்பகம் :