திரிகடுகம்
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1576-5616-5589-2222
{1576-5616-5589-2222 [{புத்தகம் பற்றி அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலு மருந்து. (இ-ள்) அருந்ததி - அருந்ததிபோலும், கற்பினார் - கற்பையுடைய மகளிரின், தோளும் - தோள்களும் திருந்திய - குற்றமற்ற, தொல் - பழைமையான, குடியில் - குடிப்பிறப்பில், (தோன்றி) மாண்டார் - மாட்சிமையடைந்தவரோடு தொடர்ச் சியும் - கொள்ளும் நட்பும், சொல்லின் - சொற்களினிடத்தே, அரில் - குற்றங்களை அகற்றும் - நீக்கவல்ல, கேள்வியார் - கேள்வியையுடையவரோடு, நட்பும் - செய்யப்படும் நட்பும். இ மூன்றும் - இந்த மூன்றும், திரிகடுகம் போலும் (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்றுள்ள, மருந்து மருந்துகளாம்; (எ-று.)
<br/> (பொ - ரை) அருந்ததி போலும், கற்பையுடைய மகளிரின் தோள்களும் குற்றமற்ற பழைமையான குடிப்பிறப்பில் தோன்றி மாட்சிமையடைந்தவரோடு கொள்ளும் நட்பும் சொற்களி னிடத்தே குற்றங்களை நீக்கவல்ல கேள்வியையுடையவரோடு செய்யப்படும் நட்பும் இந்த மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம் போன்றுள்ள மருந்துகளாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866