திருக்குறள் (மூலமும் - பரிமேலழகர் உரையும் )

ஆசிரியர்: வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatHardbound
Pages 1456
Weight1.50 kgs
₹550.00 ₹522.50    You Save ₹27
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்மொழி சிறப்புற்றதாக மதிக்கப்படுவதற்குரிய பல காரணங்களுள் திருக்குறளைப் பெற்றிருப்பதென்பது முதன்மையான காரணமெனின், அது மிகையாகாது. இதன் சிறப்பினைக் கருதியே, இது பல மொழிகளிலும் உருப்பெயர்க்கப்பட்டுப் பலராலும் அவாவோடு கற்கப்பட்டு வருகின்றது. ஆயினும், மூலத்தைப் படித்த மாத்திரத்திலேயே எங்கும் இந்நூல் எளிதிற் பொருள் விளங்குவதன்று. ஆகவே, இதற்கு உரை இன்றியமையாததாகும். இந்நூற்குப் பழமையாகவே பல உரைகள் இருக்கின்றன என்று ஏற்படினும், பரிமேலழகருரையும் மணக்குடியருரையுமே அச்சாகி வெளிவந்திருக்கின்றன; மற்றைய உரைகள் இப்போது கிடைப்பதும் அரியன.
வெளிவந்துள்ள இருவுரைகளுள்ளும் பரிமேலழகருரையே யாவராலும் பாராட்டப்படுகின்றது. அவ்வுரை, நூலாசிரியருடைய கருத்துக்கு ஏற்பப் பதப்பொருளை விளக்குவதோடு பல இடங்கட்கும் விசேடமான பதசாரம், இன்றியமையா இலக்கணக்குறிப்பு, அணி, வேறு வகையான பொருள், பிறவாறு உரை கூறுவதில் நேர்படும் மாறுபாடு முதலிய பல விஷயங்களையும் கொண்டது அவ்வுரையைப் படித்தறிவோர் பல விஷயங்களையுமுணர்ந்த புலவராவரென்பது, திண்ணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :