திருவருட்பிரகாச வள்ளலார்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category ஆன்மிகம்
Publication பாரதி பதிப்பகம்
Pages N/A
Weight200 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயலாற்றல் உடையார், இசை வல்லராய் இயங்குவதில்லை; இசை வித்தகராயுள்ளார் இயல் திறமுடையராய் இயங்குவதில்லை; இலக்கிய வல்லார் இலக்கணத்தில் வல்லமை பெற்றிலங்குவதில்லை; இலக்கண ஆற்றலுடையார் சமய நூல் வல்லவராய் விளங்குவதில்லை.
சமய நூலார் இலக்கண நூலாராக இயங்குவதில்லை ; இலக்கண, இலக்கிய, இயல், இசை, சமய நூல் திறமுடையார், அவற்றைப் பாடம் சொல்ல வல்லவராக வாய்ப்பதில்லை; எவ்வகை எழுத்துக்களையும் ஆளும் ஆற்றலுடையார், நாவன்மை பெற்றவராய் நடமாடுவதில்லை;
நாவாற்றலில் நயமுடையவர் எழுத்துக்களை ஆள்வோராக அமைவதில்லை; அருளாளராய் இருப்போர் உலகியல் உணர்ந்தவராக வாழ்வதில்லை; உலகியல் அனுபவமுடையார் அருளாளராய் அமைவதில்லை; எவ்வளவு அரிய வல்லமைகள் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அருட் கவிஞராக நடமாடுவதில்லை; ஒரு வேளை அருட்கவிஞராக இருந்தாலும் அவர் அருள் ஞானியாக இருப்பதில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

ஆன்மிகம் :

பாரதி பதிப்பகம் :