திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

ஆசிரியர்: மு.வரதராசன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 426
Weight300 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருக்குறள் பலர்க்கும் பலவகையாகப் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனி நூலாகும். இலக்கிய ஆராய்ச்சியாளர் அதைச் சிறந்த இலக்கியமாகக் கற்றுக்கலை நயம் காணலாம். அறவோர் சமய நூலெனப் போற்றி ஒழுக்க முறைகளைக் காணலாம். அரசியலார் அரசியல் நூலென மதித்தும் பல துணுக்கங்களைக் காணலாம். இவ்வாறே ஒவ்வொரு சாராரும் தம் தம் துறைக்கு ஏற்ற கருத்துகளைக் காணவாம். பொதுவாக வாழ்க்கையை ஆராய்ந்து விளக்கியுள்ள எல்லா நூல்களும் இவ்வாறு பலர்க்குப் பல்வேறு வகையாகப் பயன்படுவனவே ஆகும்.
திருக்குறளை இலக்கியமாகக் கற்றுச் சொற் சுவை பொருட் சுவை முதலியன காணும் வகையில் நூல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாறே பிற துறையாளர் தத்தமக்கு வேண்டும் கருத்துகளைக் காணும் முயற்சியும் உள்ளது. ஆதலின் இந் நூலில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றும் செய் பப்படவில்லை. திருவள்ளுவர் வாழ்க்கையை எவ்வாறு ஆராய்ந்துள்ளார். அவர் கண்டு விளக்கிய உண்மைகள்யாவை, அந்த விளக்கங்கள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வளவில் பயன்படுவன என்னும் பகுதிகளே இங்கு ஒருவாறு எழுதப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :