திரைஇசைப் பாடல்கள் 5
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+5?id=1000-7231-6915-4516
{1000-7231-6915-4516 [{புத்தகம் பற்றி கவிஞர் கண்ணதாசன் அவர்கள் படைத்த திரை இசைப் பாடல்கள் என்னும் செவிநுகர் கவியமுதத்தைப் பல தொகுதிகளாகப் பிரித்து வானதி பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இப்போது ஐந்தாம் தொகுதியாக இந்நூலை வெளி பிடுகிறது. நான்காம் தொகுதியைத் தொகுத்துத் தந்த அன்பு இளவல் திரு. கோ. ஜெயபாலன் அவர்களே இத்தொகுதியையும் தொகுத்து உள்ளார்கள். கவிஞரின் அன்புத் தம்பி திரு. இராம. கண்ணப்பன் அவர்கள் இந்நூல் சிறப்புற அச்சேற வழக்கம் போல் பெரிதும் துணை நின்றிருக்கிறார்கள். அவருக்கும், ஜெயபாலனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளம் உள்ளாரையே உலகம் போற்றும். நல்ல கவியுள்ளம் மிக்காரைக் காலமும் சேர்ந்து போற்றும். இந்த நிலையினைப் பெற்ற புலவர்கள் வரிசையில், சங்ககாலப் புலவர்களையும் இருபதாம் நூற்றாண்டுப் புலவனான மகாகவி பாரதியையும், அவரை அடுத்து நமது கவிஞர் கண்ணதாசனையும் வைத்து வருங் காலமும் வளர்தமிழ் மானுடமும் போற்றும் என்பது திண்ண ம்.

திரை இசைக் குயிலாகத் திகழ்ந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரை இசைப் பாடல்கள்ஐந்தாம் தொகுதியினை வானதி பதிப்பகத்தில் வெளியிட்டுப் பெருமகிழ்வெய்துகிறேன்.

வானதி திருநாவுக்கரசு

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866