திரைக்கதை எழுதலாம் வாங்க

ஆசிரியர்: கருந்தேள் ராஜேஷ்

Category சினிமா, இசை
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 312
ISBN978-81-929861-1-1
Weight400 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரைப்படத்துக்கு ஆணிவேராக இருக்கும் ‘திரைக்கதை’யை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை கற்றுத் தரும் நூல் இது. ஆங்கிலத்தில் இதுபோல் எண்ணற்ற நூல்கள் வந்திருக்கின்றன. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதல் திரைப்பட ஜாம்பவான்கள் வரை பலரும் இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் இதுபோன்ற புத்தகங்களைக் காண்பதும் படிப்பதும் அரிதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட பின்புலத்தில்தான் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக ஒரு நாளிதழின் சினிமா இணைப்பிதழில் கனமான தொடர்கள் இடம்பெறாது. வாசகர்கள் அதையெல்லாம் படிக்க மாட்டார்கள் எனக் காலம் காலமாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியாது. ஆனால், புழக்கத்தில் இருக்கும் பிம்பம் அதுதான்.இதைத்தான் ‘தினகரன்’ நாளிதழ் அடித்து நொறுக்கியிருக்கிறது. ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற தொடர் ‘தினகரன்’ நாளிதழுடன் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் ‘வெள்ளி மலர்’ இணைப்பிதழில் தொடர்ச்சியாக ஓராண்டு காலம் வெளியானது. சினிமாவுக்கான திரைக்கதையை எப்படி எழுத வேண்டும், அதை எப்படி உருவாக்கினால் சுவாரசியமாக அமையும்... என்பதை எல்லாம் தமிழில் வெற்றி பெற்ற படங்களை முன்வைத்தே இத்தொடர் ஆராய்ந்தது. வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றஅந்தத் தொடரே புத்தகமாக வெளியாகியுள்ளது. வெளியான வேகத்திலேயே நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்ததே, இதன் தேவையை உணர்த்தும். தமிழ் சினிமாவில் வெற்றி பெறத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் பயன்படும்..

உங்கள் கருத்துக்களை பகிர :
கருந்தேள் ராஜேஷ் :

சினிமா, இசை :

சூரியன் பதிப்பகம் :