திரை இசைப் பாடல்கள் 3
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+3?id=1759-5004-4936-7706
{1759-5004-4936-7706 [{புத்தகம் பற்றி "அநுபவம் என்பது எப்படி இருக்கும்?”

"கண்ணதாசன் பாடல்போல் இருக்கும்!''

"கண்ணதாசன் எப்படி இருப்பார்?"

“அநுபவங்களாக இருப்பார்!"

இப்படி ஒரு கல்லூரி மாணவர் என்னிடம் விவாதித்தார். இந்த நியாயம் கேட்பதற்கு இதமாகவும் ரசிப்பதற்குச் சுகமாகவும் அவரது வாதம் எனக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்கியது. நவரசம் கொண்டது வாழ்க்கை என்று இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அந்த ஒவ்வோர் சுவைக்கும் ஓராயிரம் உட்பிரிவுகள் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள உணர்ச்சியின் நிறங்களைத் தனது இசைப் பாடல்களின் வாயிலாகக் காட்டுகிறார் கவிஞர். கவிஞரது பல்லவிகள் ஒவ்வொன்றும் அவரது அநுபவத்தின் எதிரொலிகள். மனித குலத்தின் மவுனத்தில் உறங்கிய உணர்ச்சிகளின் நாவுகளாக ஒலிப்பன. எந்தச் சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவும் அதே சமயத்தில் ஒவ்வொருவர் இதயத்தையும் தொட்டு வருடுமாறும் கவிஞரால் மட்டுமே பாடல்களை எழுத முடியும் என்பதை இந்த மூன்றாவது தொகுதியில் உள்ள ஒவ்வொரு பாடலும் இசை பாடுகிறது. கவிஞன் மனித மனத்தை ஆள்கிறான் என்ற மகத்தான உண்மைக்குக் கவிஞர் கண்ணதாசன் தனது மேதாவிலாசத்தால் நிரூபணமாகத் திகழ்பவர். எப்படி இவரால் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துமாறு எழுத முடிந்தது? 'கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும்' களிப்பாக - தனது பாட்டு வரிகளைத் தவழச் செய்த, கவிஞர் செய்த மாயம் என்ன? கண்ணதாசனின் பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் கம்ப சித்திரமாகிய-மகிமை என்ன? அதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல் அநுபவம்! அநுபவம்! அநுபவம்! அநுபவம்! அநுபவத்தின் அகராதி அவர்! தனி மனித வாழ்க்கையில் - சமூக வாழ்க்கையில் உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள், முரண்பாடுகள், இன்பதுன்பங்கள் அத்தனைக்கும் விளக்கம் கவிஞரது திரைப்பாடல் சொல்லிச் செல்லும். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. மனித மனம் தவிக்கிறது. ஈசலின் இறகைப்போல் இதயம் படபடக்கிறது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866