தீந்தமிழ்ச் செல்வம்

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பழந்தமிழ்ப் பெண்கள் தனி மதிப்புடன் ஆண்களோடு சரி நிகர் உரிமையுடன் இருந்து வந்தனர் என்பதை நாம் அறிந்து இன்புறும்படி செய்தது நம் கண்ணகியின் காற்சிலம்பு, பாண்டிமா தேவி பாண்டியனுடன் சரிநிகராகக் கொலுவிருந்தனள். செங்குட்டுவன் தன் மனைவி இளங்கோ வேண்மாளைக் கேட்டு அவள் சொற்படியே கண்ணகிக்கு வழிபாடு செய்தான். கற்புடை மகளிரைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்து வந்தனர். என்னே பழந்தமிழரின் சரிநிகர் பண்பு!”
‘வடவரசர் கூறிய பழிச்சொல்லைப் போக்காவிட்டால், அது சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் அரசமரபிற்கே இழுக்காகும்' (சிலப் 26: 10-12) என்று செங்குட்டுவன் கூறுவதால், முடியுடை மூவேந்தரும் ஒரே தமிழினம் என்னும் ஒற்றுமையுடன் 'தமிழரசர் என்பது மூவரையுமே குறிக்கும் என்னும் பொது நோக்குடன் தமிழகத்தை யாண்டு வந்தனர் என்னும் செய்தியை அறிந்து நம்மை உள்ளும் புறமும் உவக்கும்படி செய்த பெருமை கற்பரசி கண்ணகியின் காற்சிலம்பை யன்றோ சேரும்? மெல்லி! சிலம்பினால் விளைந்த நன்மைகள் இவையெல்லாம்.”
“அல்லி! இது அருமையான ஆராய்ச்சி! இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் பல தமிழில் வெளிவருதல் வேண்டும்."

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :