தீம்பால்

ஆசிரியர்: முனைவர் ப.பாண்டியராஜா

Category சங்க இலக்கியம்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 120
ISBN978-81-95534-1-9
Weight200 grams
₹130.00 ₹126.10    You Save ₹3
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய செல்வம் சங்க லக்கியங்களே எனலாம். தமிழர்கள் ஏறக்குறைய தமது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு நின்ற நிலையில், தமிழரைத் தமிழருக்கே அடையாளம் காட்டியவை சங்க இலக்கியங்களே. இன்றைக்குத் தமிழருடன் பல மேனாட்டினரும் இந்த இலக்கியங்களைப் போற்றிப் புகழுகின்றனர். சங்க இலக்கியங்களைப் பற்றி விக்கிப்பீடியா கூறுவதைப் பாருங்கள்:
"சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப் பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப் பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப்பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.”

உங்கள் கருத்துக்களை பகிர :
சங்க இலக்கியம் :

யாழிசைப் பதிப்பகம் :