துடிக்கூத்து

ஆசிரியர்: நேசமித்ரன்

Category கவிதைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Pack
Pages 108
ISBN978-93-87707-74-0
Weight150 grams
₹130.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாம் எதிர்கொள்பவை மற்றும் சுடப்பவை எல்லாம் உள்ளீடற்றப் பொருண்மையை உடையவை. அதன்பின்னே இயங்கும் கார்பரேட் பெருநிறுவனங்களின் வணிகச் சொல்லாடல்கள், நம் அனுமதியைப் பெற்றே நம்மைக் கையாளுகின்றன. எல்லோரையும் அதிகாரத்தின் அங்கங்களாக மாற்றப்படுவதற்கான நோக்கிலேயே செலுத்தப்படுகின்றன. கட்டமைத்திருக்கும் சொல்லாடல்கள் அனைத்திலும் கண்ணுக்குப் புலப்படாத இறையாண்மையின் , அதிகாரக் கரங்களின் பிடிகளில் இயங்குகிறது. அவைகளை , அவிழ்க்கும் கவிதையாடல்களை அகப்படுத்தும் பிரதிகளே அரசியல் மொழிக்கான முன் நகர்வுகள் எனலாம். அத்தகைய பிரதியாக்கத்தினைக் கொண்டிருப்பவை நேசமித்ரனின் கவிதைகள். இதையொருவித Surface Writing என்ற நவீனத்துவத்தின் பிந்தைய வகைமையில் நேசமித்ரன் தனது கவிதைகளை எழுதியிருக்கிறார். மேலும் இதன் மொழியானது பன்மைக் குறிப்பீட்டை வாசகரின் , மனதில் மூண்டெழச் செய்வதற்கான வல்லமையை உடையன, அனைத்து அதிகார ஒப்பனைகளையும் கலைத்தழிக்கும் , கவித்துவத்தை இத்தொகுதியின் கவிதைகள் செய்கின்றன. நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேசமித்ரன் :

கவிதைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :