தெனாலிராமன் நகைச்சுவை கதைகள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category கதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 136
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ராமனுக்கும் தங்கத்திற்கும் மிகவும் எளிய முறையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் வெகு சிலரே கலந்து கொண்டனர். இது முடிந்து பல மாதங்கள் ஓடின. ஒருநாள் தங்கம் முகத்தை மிக வாட்டத்துடன் “உம்' மென்று வைத்திருந்தாள், அப்போது அவள் அருகே வந்த ராமன், "தங்கம்! உன் கமல முகத்தை ஏன் இப்படி உம்மணா மூஞ்சியாட்டம் வச்சிக்கிட்டிருக்கே? வரவர உன்னோட நிலைமை எனக்குப் பெரிய வேதனையாப் போச்சு. நான் என்ன செய்வேன்? நல்லகாலம் வந்தால் தானே?' (ராமன் மனைவிக்கு “க்மலம்' என்ற பெயரும் உண்டு.)
"நீர் சோற்றைத் தின்னுட்டு வீட்டிலேயே குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தால் நல்ல காலம் எங்கிருந்து வந்து குதிக்கும்? நாம் வீட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால் நல்ல காலம் நம்மைத் தேடி வந்திடுமா?"
"நானும் ஒன்றும் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. நம்ம கிராமத்தில் ஓலைக் குடிசைகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. எல்லோரும் கல் வீடு கட்டிக் கொண்டால் இனி சங்கடம் வராதல்லவா? அதைப் பற்றி நம்ம கிராமவாசிகளிடம் பேசி ஒரு முடிவு எடுக்க இருக்கிறேன்.''


உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

கதைகள் :

பாரதி பதிப்பகம் :