தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

ஆசிரியர்: க.அ.நீலகண்ட சாஸ்திரி

Category வரலாறு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 503
ISBN978-81-7720-261-8
Weight550 grams
₹390.00 ₹370.50    You Save ₹19
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு
ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது. நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூல் பண்டைய, இடைக்கால சிலோன் உள்பட தென்னிந்திய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் ஒரு முதன்மை ஆதாரம். இதில் இந்தியப் பகுதிக்கு வந்த மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை பல வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் தென்பகுதியிலிருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பு மார்க்கோ
போலா, இப்னு பதூதா, பிளினி உள்பட பலரையும் மத்திய காலத் தென்னிந்திய வரலாற்றை விவரிக்க அழைத்தது. சாஸ்திரியின் அரிய உழைப்பால் தொகுக்கப்பட்ட இந்த ஈர்ப்புமிக்க நூல் தொடக்க கால அரிய சான்றுகளின் பதிவுகள், கற்றறிந்த சமூகங்களின் நூல்கள், ஆய்விதழ்கள் முதலியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் வியத்தகு உண்மைகள், நாட்டுப்புறக் குறிப்புகள், அவதானிப்புகள் போன்றவை ஏராளமாய் விரவிக்கிடக்கின்றன. நமக்குத் தெரியுமா? அரிசி ஒருவகையான சோளம், சீனர்கள் இந்தியாவை செண்டவ் என்று அழைத்தது, சிலோனில்
வசிப்பவர்கள் இறந்தவர்கள்மீது நறுமணப் பொருள்களைப் பூசி பதப்படுத்திய விதம், கோமாரி இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு நாடு, ஏன் அங்கு சர்க்கரை உற்பத்தி செய்யும் மரங்கள்கூட இருக்கின்றன, வைரமும் வைடூரியமும் குவிந்துகிடக்கின்றன! ஒவ்வொரு பயணியின்
குறிப்புகளும் மூச்சுமுட்ட வைக்கின்றன, பட்டியலுக்கும் , விசித்திரங்களுக்கும் முடிவில்லை. இவையே இந்தப் புத்தகத்தை நாம்
" வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.அ.நீலகண்ட சாஸ்திரி :

வரலாறு :

அடையாளம் பதிப்பகம் :