தேர்தல் வழிகாட்டி

ஆசிரியர்: வே. காசிநாதன்

Category பொது நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 130
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்திய நாடு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு. இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் வாக்குரிமை உண்டு. தமது வாக்குகளைத் தாம்விரும்பும் தகுதியான ஒருவருக்கு அளிக்கும் உரிமை உடையவர். எனவே அவர்களுடைய வாக்குகளின் மதிப்பினை உணர்ந்து தகுதியான ஒருவர்க்கு அவ் வாக்கினை அளித்து மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றுவது அவருடைய உரிமை. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் அக்கறையுடனே'வாக்காளர் தேர்தல் கையேடு' என்னும் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்காளரும் தமது கடமை என்ன? தமது உரிமை என்ன? அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொண்டவற்றை எப்படிப் பயன்படுத்துவது? நல்ல வேட்பாளர்களை எப்படி அடையாளம் கண்டு தேர்ந்தெடுப்பது என்பன போன்ற முக்கியமான விவரங்களை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தொகுத்துரைப்பதே இக்கையேடு. வாக்காளர் கடமைகள், வாக்குச் செலுத்தும் முறை, வாக்குச்சாவடிகளின் அமைப்பு முறை எனப் பல்வேறு சம்பந்தப்பட்ட விவரங்களையும் பாமரரும் புரிந்துகொண்டு பயன்படுத்தும் வகையில் வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பம்சமாக உள்ளது.
சட்டத்துறை வல்லுநரும் மக்களாட்சித் தத்துவத்தில் ஆழங்கால் பட்டவரும் பல்லாண்டு காலமாக வழக்கறிஞராகவும் முதுநிலை வழக்கறிஞராகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் பணிபுரிபவரும், பல்வேறு சட்டக்குழுக்களில் சிறப்பிடம் பெற்றவருமான வழக்கறிஞர் வே. காசிநாதன் அவர்கள் அனுபவ அடிப்படையில் வகைப்படுத்திச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். வாக்காளப் பெருமக்களுக்குப் பயனுள்ள படைப்பு.
பல்துறை நூல்களையும் வெளியிட்டு பதிப்பகத்துறையில் சிறப்பிடம் பெற்றுள்ள எமது பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் வாங்கிப் பயன் அடைவார்கள் என நம்புகிறோம்

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. காசிநாதன் :

பொது நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :