தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும்

ஆசிரியர்: யமுனா ராஜேந்திரன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages N/A
₹450.00 ₹337.50    You Save ₹112
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வரலாற்றின் பல முக்கியப் பக்கங்கள் நினைவிலிருந்து அழியாமலிருக்க அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அப்படி யான வரலாற்றுத் தேவையை உணர்ந்து, கடந்த 2017 ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ‘தை எழுச்சி’யாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்ட நிகழ்வு , 34 தமிழக ஆளுமைகளின் கட்டுரைகளால் ஆவணமாகி உள்ளது.

இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்திய மாநிலங்களிலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஆதரவுக் கிளர்ச்சிகளை உண்டாக்கியது. தலைநகரான சென்னையை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் மதுரை, கோவையில் நடைபெற்ற நிகழ்வுகளையும் பற்றியதாகக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரைகளைச் சமூக தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கள ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ‘அரசியல் பகுப்பாய்வு: பன்முகப் பார்வைகள்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

- தி இந்து .

உங்கள் கருத்துக்களை பகிர :
யமுனா ராஜேந்திரன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :