தொல்காப்பியச் சிறப்புகள்
ஆசிரியர்:
இரா. அறவேந்தன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1910-5184-2762-7331
{1910-5184-2762-7331 [{புத்தகம் பற்றி
<br/> தொல்காப்பியமே சிறப்புக்குரியது. தொல்காப்பியத்திலும் சிறப்புக்குரியவை பல. இது திராவிட மொழிகளில் எழுதப் பெற்ற முதல் மரபிலக்கண நூல். உலகமொழிகளில் கூட இத்தகைய ஒரு நூல் இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் முயற்சிகளுள் முதல்படியாக இது இருக்கலாம். நண்பர் இரா. அறவேந்தன் நல்ல தமிழ் ஆய்வாளர். ஒப்பாய்வுத் துறையிலும் உற்சாகமான ஈடுபாடு கொண்டவர். ஒப்பாய்வின் நோக்கம் உயர்வு மனப்பான்மைக்கான உந்துதல் அல்ல ; ஒன்றின் தனித்தன்மையை இனங்காண ஏனையவற்றுடன் ஒப்பிட வேண்டிய தேவை கட்டாயமாகின்றது என்கிறார் இவர். உலகளவில் ஒப்பிட்டு உண்மை காணும் காலம் இவருக்கு நிச்சயம் கிடைக்கும். அதற்கான முயற்சிகளும் முனைப்புகளும் இவருக்குண்டு.அண்ணாமலை, பெரியார், மதுரைப் பல்கலைக் கழகங்களில் தன் ஆய்வுகளை முன்வைக்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866