தொல்காப்பியத்தின் காலம்

ஆசிரியர்: குணா

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaperback
Pages 330
Weight400 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மொழியியல் ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் அடிச்சுவட்டில் நடையிட்டுக் கொண்டிருக்கின்ற ஆய்வியல் வெங்காலூர்த் தமிழக ஆய்வரண் அறிஞர் குணா அவர்கள் ஒப்பாய்வு முறையில் ஆய்ந்து வெளிக்கொணர்ந்துள்ள நூல்தான் இந்தத் தொல்காப்பியத்தின் காலம்.


பதினாறாம் அகவையில், எனக்கு வாய்த்த முதல் அரசியல் ஆசான் தமிழ்மண் மீட்ட ம. பொ. சிவஞானம்தான். தமிழரசுக் கழகத்தில் என்றும் உறுப்பினராயில்லாத நிலையிலும், தமிழையும் தமிழ்மண்ணையும் கண்ணெனப் போற்றும் மண்பாசத்தை எனது மனத்தில் வித்தாய் ஊன்றியவரும் அவர்தாம். தமிழரசுக் கழகச் சார்புநிலையே 1960ஆம் ஆண்டளவில் பொதுவுடைமைக் கோட் பாட்டின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடம் நம்பிக்கை கொண் டிருந்த எனக்கு இந்திய-சீன எல்லைப்போரே பெரும் பல்கலைக் கழகமானது. 1964ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சி பிளந்தஸ் போது, இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதல் தொழில் நகரமா யிருந்த கோலார் தங்கவயலில் கோலோச்சி வந்த இந்தியப் பொது வுடைமைக் கட்சியின் கிளையை ஏறத்தாழ ஒற்றையாளாய் நின்று இடது(மார்க்சியப்) பொதுவுடைமைக் கட்சியாக மாற்றினேன். - வேலை கிடைத்தபின் வெங்காலூருக்கு வந்து மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சிக்குள் புகுந்த என்னை அடுத்தடுத்துப் பல அதிர்ச்சிகள் எதிர்கொண்டன. தமிழகப் பொதுவுடைமைக் கட்சி களுக்குள் புரையோடிக் கிடந்த சாதி உணர்வும் தமிழ் எதிர்ப்பும் என்னை மலைப்புறச் செய்தன. அந்தக் கட்சிகளில் ஆணிவேராய் அடியோடி நின்ற அக் கேடுகளுக்கான கரணம் அப்போது தெரிய வில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :