நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ்

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-89796-68-2
Weight200 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த 'நட்சத்திர ஹோராமணி & டேபிள்ஸ் ஆப் பாவாஸ்' என்ற அரிய நூல் வாயிலாக மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மிகவும் பெருமையடைகின்றேன். நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அற்புதமான நூல், மிகவும் கடினமான உழைப்புடன் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அறிவுப் பூர்வமான வேண்டுகோள் மூலம் உங்கள் கையில் உள்ள இந்த நூல் மற்ற ஜோதிட நூல்களைப் போன்று சாதாரணமானது என்று கூறிவிட முடியாது.
தற்போதைய நவீன யுகத்தில், 'கம்ப்யூட்டர்கள்' ஜாதகக் கணிப்பைக் கணித்துக் கொடுக்கின்றது. விஞ்ஞான அடிப்படையில் கம்ப்யூட்டர்கள் "நட்சத்திர ஹோராமணி” அடிப்படையில் "டேபிள்ஸ் ஆப் பாவாஸ்” என்ற கணக்கீட்டின்படி உலகில் எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் கணித்துக் கொடுக்கின்றது. 'இம்முறையில் நாமே கணித்துக் கொள்ள முடியாதா?' என்ற வாசகர்களின் கேள்விகளுக்கு 'முடியும்' என்ற பதிலாகத்தான் இந்தப் பொக்கிஷம் போன்ற நூல் உங்கள் கைகளில் உள்ளது.
ஆங்கில அறிவு பெற்றவர்கள் மட்டும்தான் இம்முறையில் கணிக்க முடியும் என்ற நிலை மாறி, தமிழ் மூலமாகவும் நவீன முறையில் துல்லியமான கணக்கீடு செய்ய உதவியாக இந்த நூலில் வழிமுறைகளையும், பல்வேறு எளிமையான பட்டியல்களையும் கொடுத் துள்ளதுடன், வான சாஸ்திர நுணுக்கங்களையும் அளித்துள்ளதால், நவீன முறையில் உங்களின் ஜாதகக் கணிப்பு துல்லியமாக அமையும். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பிறந்தவர்களின் ஜாதகக் கணிப்பையும் நீங்கள் செய்ய முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :