நந்தவனம்

ஆசிரியர்: ஸ்ரீ

Category கவிதைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
வாழ்க்கையில் நிகழும் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, நிகழ்ச்சியோ , மெல்லிய சுழற்சியோ, நினைவலையாகப் பரவும் நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு சலனமோ சிறுகதையாக உருக்கொள்கிறது. நமக்கு ஏற்படுகின்ற அனுபவ த்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது அதை பாரமாகச் சுமக்காமல் நம் மனதிலிருந்து இறக்கி வைத்தல் இதுவே சிறுகதையின் எழுதப்படாத இலக்கணமாக இன்றுவரை இருந்து வருகிறது.'ஸ்ரீ' அவர்களுக்கு எழுதவும், பகிரவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றது. அவருடைய கதைகளில் பெரும்பாலும் சமூகம் சார்ந்த சிந்தனைகளே முக்கியத்துவம் பெறுகிறது. 'ஸ்ரீ' யின் கதைகளை வாசிக்கின்ற பொழுது மனித நேயம், பண்பும், ஒழுக்கம் ஆகியவற்றிற்கு வாழ்க்கையில் உள்ள அவசியம் குறித்து நாம் அழுத்தமாக உணரலாம். வடிவத்தில் தொய்வின்றி தெளிந்த நீரோட்டமாக ஆரம்பம், முடிவு என கட்டுக்கோப்பான சொற்செட்டுடன் எழுதப்பட்டிருப்பதில் இவரது கற்பனைத் திறனும், சொல்லாட்சியும் , மிகையேதுமற்று நயமுடன் வெளிப்பட்டிருக்கிறது.உணர்ச்சியோட்டம் கொண்ட இக்கதைகள் எல்லாமே எளிமையான மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களில் உருக்கொள்கிறவை. திருகலற்று, அன்றாடம் புழங்குகின்ற, சாமான்யனின் மொழியில் புரிந்து கொள்ள முடிகிறதாகவும், வாசிப்புச் சுவாரசியம் அளிப்பவையாகவும் இந்தக் கதைகள் இருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

அகநாழிகை பதிப்பகம் :