நன்னூல்

ஆசிரியர்: அடியன் மணிவாசகன்

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 352
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எளிமை என்பது எல்லோரும் வேண்டுவதேயாம். உயர்நிலைப் பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், பல்கலைக்கழக மாணவர், அரசுத்துறை உயர்பணி அலுவலராம் மாணவர், ஆசிரியப் பயிற்சி மாணவர், ஆராய்ச்சி முனைவர் பட்ட மாணவர் என்று பலதிறப் பட்ட மாணவரும் புரிந்து பயில வாய்ப்பாகவே இந்த நன்னூல் இலக்கண உரை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வொடு கூறிக்கொள்கிறேன். இந்த எளிய புரிவுதரும் உரையைத் தமிழ்ப் பற்றுடையவரும் ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு நூற்பாவின் உட்கருத்தையே வினா வடிவாக்கியிருக்கி றேன். அதனால் ஒரு நூற்பாக்கூட விடுபடவில்லை. நூற்பாவின் பொருளையும் குறைவுபடாமல் தெளிவுரையாகத் தந்திருக்கிறேன். ஒவ்வொரு நூற்பாவின் உரையிலும் காட்டிய எடுத்துக்காட்டுக்களைச் (சில இடம்தவிர) புதுமையாகவும் எளிமையாகவும் கொடுத்திருக்கிறேன். புரிவதற்காகவே குறியீடுகளும் பலவாறு இட்டிருக்கிறேன். இந்த வகையில் எல்லாம் எளிமையே!
மேலும், நூற்பாக்கள் புணர்ச்சிகள் பிரித்துப் படிக்க எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன. இலக்கணத்தைச் சுமையாகக் கருதி ஒதுங்காமல் சுவையாகப் பயில ஆர்வத்துடன் வந்து நன்னூலைக் கற்க வேண்டும் என்பதே எனது தலையாய நோக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அடியன் மணிவாசகன் :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :