நம்பியகப் பொருள்

ஆசிரியர்: க. தமிழ்ச்செல்வன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 144
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலக மக்களின் வாழ்க்கை வளத்துடன் நிறைவாக அமையும் பாங்கில் பண்படுத்தும் நோக்கில் எழுந்தவை கலைகள். அக்கலைகள் நன்கமைந்த மொழிகளுள் தலைமையும் பழைமையும் உடையது தமிழ்மொழி. தமிழ்மொழி இனிமையும், தெளிவும் சொற்பொருள் அமைதியும், கருத்து வளமும் பொருள் பெருக்கமும், தனித்தியங்கும் ஆற்றலும் உடையது.
பழைமை வாய்ந்த இம்மொழி இயல் இசை நாடகம் என முத்திறம் உடையது. அவை ஒவ்வொன்றும் பல்வேறு இலக்கிய இலக்கணங்களை உடையதாக இருந்தன. அவற்றுள் இசையும் நாடகமும் இயம்பும் நூல்கள் மறைந்துவிட்டன. எதுவும் கிடைத்திலது. மிஞ்சிய இயற்றமிழின் இலக்கிய இலக்கணங்களே கிடைத்துள்ளன.
இயற்றமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து பகுதிகளை உடையது. பொருள் இலக்கணம் தமிழ் மொழிக்கே அமைந்த தனித்தன்மையும், வாழ்க்கையினை நுட்பமாக உணர்த்தும் விந்தை அழகும் உடையதாக இருக்கிறது. உலகமே அதனைக் கண்டு வியக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :