நற்கதி தரும் நந்தி வழிபாடு

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
Formatpaper back
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம் உடலே ஓர் ஆலயம் என்பார் திருமூலர். உடம்பென்னும் ஆலயத்தில் உயிர் பசுவாக உள்ளது. உயிருக்குயிராம் உயிரைக் காப்பவனாகிய இறைவன் பதியாக இருக்கின்றான். இறைவனை உயிர் அடையவொட்டாமல் தடுக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் பாசமாகவும் இருக்கின்றன. சிவாலயங்களில் நந்தி, லிங்கம், பலிபீடம் இம்மூன்றும் பசு, பதி, பாசம் என்னும் முப்பொருளைக் குறிக்கின்றன. ஆலயத்தினுள் செல்லும்போது நந்திக்கு முன்புறம் பலிபீடம் அமைக்கப் பெற்றிருக்கும். உள்ளே லிங்கத்துக்கு பின்புறமும் பலிபீடம் உள்ளது. பலிபீடமானது நம் பாசத்தை பலியிடும் இடமாகும். பொருள்பாசம் நீங்கப் பெற்றால் பசுவானது (உயிர்) இறைவனின் அருள்பாசத்தை அடையும், அதாவது இறைவனோடு ஐக்கியமாகும் என்பதை உணர்த்தவே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. வள்ளற் பெருமானுக்கு வாய் கோபுர வாசல் என்பர். வாய்க்குள் இருக்கும் நாக்கு நந்தியைக் குறிக்கும். நாக்கின் உதவியின்றி எதையும் உண்ணமுடியாது. அதுபோல நந்தியின் அருள்பெற்றே ஆலயத்தினுள் சென்று வழிபட வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :