நலமான சூழலும் வளமான வாழ்வும்

ஆசிரியர்: ச.மி.ஜான் கென்னடி

Category சுற்றுச்சூழல்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு அழகிய ரோஜா செடி சூரியனைப் பார்த்து, ''உன் ஒளி எனக்குத் தேவையில்லை '' என்றது. சூரியன் தன் ஒளியைத் தரவில்லை . காற்றைப் பார்த்து ''உன் தயவு எனக்குத் தேவையில்லை'' என்றது. காற்று நின்றது.
மழை மேகத்தைப் பார்த்து 'உன் தயவு எனக்குத் தேவை யில்லை' என்றது. மழையும் பொய்த்துப் போனது. நிலத்தைப் பார்த்து 'உன் மண் எனக்குத் தேவையில்லை' என்றது. மண்ணும் ஒதுங்கிக் கொண்டது. தோட்டக்காரனைப் பார்த்து 'உன் கவனிப்பு எனக்குத் தேவையில்லை' என்றது. தோட்டக்காரனும் அதை மறந்துவிட்டான். இரண்டு நாட்கள் கழித்து அழகிய ரோஜா செடி சூரிய ஒளி, காற்று, நீர், நிலம், தோட்டக்காரன் இல்லாமல் வாடி வதங்கிப் பரிதாபமாகக் காட்சியளித்தது. இயற்கையில் ஒன்று மற்றொன்றோடு உயிரியல் தொடர்பு கொள்ளும் முறையில் படைக்கப்பட்டுள்ளது. இயற்கையில் எதுவுமே தனித்து இயங்கவோ, இருக்கவோ முடியாது. மற்றனைத்தோடும் சார்ந்துதான் வாழ முடியும். இதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளாத மனிதன் இன்று தான் சார்ந்திருக்கும் இயற்கையை அழிப்பதன் மூலம் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :

பாரதி பதிப்பகம் :