நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி

ஆசிரியர்: கல்கி

Category கட்டுரைகள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
₹65.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிறையிலிருந்த மகாத்மாவை ராஜாஜி கண்டு பேசினார். ஜனாப் ஜின்னாவைக் கண்டு பேசி ஒரு நியாயமான ஒப்பந்தத்தைத் தயாரிக்க, மகாத்மா ராஜாஜிக்கு அதிகாரம் அளித்தார். ராஜாஜி ஜனாப் ஜின்னாவைக் கண்டு பேசினார். ஜனாப் ஜின்னா கொம்பில் ஏறிக்கொண்டார். ராஜாஜியின் நியாயமான யோசனைகளுக்கு அவர் இணங்க வில்லை. பஞ்சாப்பிலும் வங்காளத்திலும் ஹிந்துக்கள் பெரும்பான்மை யோராயுள்ள பிரதேசங்களைப் பாரதத்தில் சேர்த்துவிட்டு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்களைப் பாகிஸ்தானில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ராஜாஜியின் யோசனை. இதை ஜனாப் ஜின்னா நிராகரித்து முழுப் பஞ்சாப்பும் முழு வங்காளமும் பாகிஸ்தானில் சேரவேண்டும் என்றார். “ஸி.ஆர். திட்டத்தின் படி ஏற்படக்கூடிய செல்லரித்த பாகிஸ்தான் எனக்குத் தேவை இல்லை!” என்று பகிரங்க அறிக்கையும் விடுத்தார். ஆனால், பிற்காலத்தில் ஸி.ஆர். திட்டமான “செல்லரித்த பாகிஸ்தா”னைத்தான் ஜனாப் ஜின்னா ஒப்புக்கொள்ளும்படி நேர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

கட்டுரைகள் :

சந்தியா பதிப்பகம் :