நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்

ஆசிரியர்: கோ.இராஜகோபாலப்பிள்ளை ,மஹாவித்வான் கா.இராமசாமி நாயுடு

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இவ்வுரையாசிரியராகிய மகாவித்துவான் கோமளபுரம் இராஜகோபாலப்பிள்ளையவர்களின் உரையில், மாணவர்கள் நன்னூல் முதலிய இலக்கணங்களிற் பலநாள் வருந்தியன்றி பறிதற்கரிய பல அரிய இலக்கண நுட்பங்கள் இருத்தலின், அவர்தம் உரைப் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று எழுந்த எனது வேட்கை பெரிதும் சித்தி பெறுவதாயிற்று. அவர்தம் உரைப் புத்தகங்களில் என்னால் வெளிவரச் செய்விக்கப்பட்டவை இதனோடு நான்காகும். அவை, நீதிநெறி விளக்கவுரை, திரிகடுக வரை, நளவெண்பாவுரை, இந்நான்மணிக்கடிகையுரையாம்.
இந் நான்மணிக்கடிகையின் “அலைப்பான் பிறவுயிரை'' என்னும் இருபத்தாறாவது செய்யுளுக்கு இவ்வுரையாசிரியராகிய பிள்ளையவர்களின் உரை கிடைக்கவில்லை. ஆகையால், அதற்கு மாத்திரம் யான் உரையெழுதினேன். அச் செய்யுளில் “அலைப்பான் பிறவுயிரை” என்பதைப் பாடமாகவும், 'பிறிதுயிரை' என்பதைப் பாடபேதமாகவும் கொண்டு உரை எழுதப்பட்டிருத்தலின், அதிற்பிறிதுயிரை' என்றிருப்பதைப் 'பிறவுயிரை' என்று திருத்திக் கொள்ளுதல் வேண்டும். பிறிதுயிரை என்பதற்கு விசேஷவுரையில் உரையும் இலக்கணமும் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வுரையாசிரியராகிய மேற்படி பிள்ளையவர்களால் எழுதப்பெற்ற இந்நூலாசிரியர் சரித்திரம் இதன் பின்னாற் சேர்க்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :