நாற்றங்கால்
ஆசிரியர்:
குணா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?id=1454-7481-6846-8297
{1454-7481-6846-8297 [{புத்தகம் பற்றி முன்னுரை நாற்றங்கால் என்ற இந்நூல் நான் எழுதிய கட்டுரைகள் சிலவற் றையும், அவ்வப்போது ஆற்றிய உரைகள் சிலவற்றையும் கொண்ட ஒரு தொகைநூலாகும். கட்டுரைகளில் சில, நான் பொதுவுடைமை யனாயிருந்த காலத்தில் எழுதப்பட்டவை; அதனால், முப்பது ஆண்டு களுக்கு முற்பட்டவை. |'நாடும் வேண்டாம்; குடும்பமும் வேண்டாம்; திருமணமும் வேண்டாம்; ஆணும் பெண்ணும் ஒழுக்கங்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டுத்தெருநாயைப்போல் புணர்ந்து வாழலாம் என்றெல்லாம் உளறித் திரியும் பின்புத்தியம் (Post-Modernism) என்ற உதிரிக் கோட் பாட்டைத் தமிழரின் மரபு அறிவியல் என்னும் கட்டுரை அம்பலப் படுத்துகிறது; 'உலகமயமாக்கம்' என்ற உலக வல்லரசுகளின் கோலத் திற்கு ஒப்பனை செய்கிற கழிசடையே அதுவென அலசிக் காட்டுகிறது.உதிரிப் பாட்டாளி, உதிரி முதலாளி என்று உதிரிகள் (Lumpen) இருவகைப்படுவரென இதுவரையில் கூறப்பட்டு வந்தது. இந் நிலை யில், தத்தம் அறிவையே முதலாகக் கொண்டு உதிரிகளாய் உழல்ப வரையும்கூட உதிரிகளில் சேர்த்து, மூவிதழ் உதிரிகள் என்ற கட்டுரை யில் அவர்களை உதிரி அறிவாளிகள் என நான் அழைத்தேன். பின்புத்தியத்தைப் பற்றிய எனது மதிப்பீடு அதன் தொடர்ச்சியாகும்.</br>} {பதிப்புரை தமிழ்மண் பறிபோனால், தமிழ் போகும்; தமிழன் தன்னையே இழப்பான்; தமிழ்ப் பண்பாடும் சிதையும் என்பதை எடுத்துரைத்து, தமிழ்மண்ணும் அதன் இறைமையும் கண்போல் காக்கப்படவேண்டு மெனக் கூறும் கட்டுரைகளும் இந்நூலில் அடங்குவன. தொன்றுதொட்டுத் தமிழர் போற்றிவந்த அன்பின் ஐந்திணை ஒழுக்கத்திற்குப் புறம்பான இடைச்செருகல்கள் தொல்காப்பியத்தில் கிடப்பதைப் பரத்தை என்ற கட்டுரை அடையாளம் காட்டுகிறது. இந்திரன் தமிழ்த் தெய்வமே யன்றி 'ஆரியத் தெய்வமே அன்று என்ப தையும், ஞாயிற்றுமண்டிலத்தின் மீதுள்ள மீயுயர் புள்ளியான வேனில் முடங்கலின் உருவகமே இந்திரன் என்பதையும் இந்திரன் வழிபாடு என்ற கட்டுரை கூறுகிறது. இலங்கைத் தீவில் நாடற்றவராய்க் கிடக்கும் மலையகத் தமிழர்க்கு இழைக்கப்பட்ட அவலங்களை அரத்த உறவே இல்லையா? என்ற கட்டுரை படம்பிடித்துக் காட்டுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866