நினைவுகளில் வாழும் கிராமம்
ஆசிரியர்:
சி.கிருஷ்ணன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+?id=1477-2693-6560-2558
{1477-2693-6560-2558 [{புத்தகம் பற்றி 'கிருஷ்ணன் வாத்தியார்' பெருவாகோட்டை சுற்றுவட்டார மக்களால் இப்படித்தான் அறியப்படுகிறார் இந்நூல் ஆசிரியர். நான் இவரை அறிந்தது தோழர் கி.பார்த்திபராஜாவின் தந்தையாக. ஊர் மீது அவர்கொண்ட அளவற்ற நேசத்தை வெளிப்படுத்துவது இந்நூல். ஊர் என்றால் மனிதன் தொடங்கி சகல ஜீவராசிகளும் மட்டுமல்ல உயிரற்றதும்தான். இந்நூல் சொந்த ஊர், சுற்று வட்டாரம் கடந்து வேறெதையும் பேசவில்லை என்றே தெரிகிறது. எல்லாமே அவரின் மண் சார்ந்த தகவல்கள்தான். வட்டார வரலாறு, உள்ளுர் வரலாறு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் இதை. எல்லாவற்றையும் அவர் சொந்த ஊரான பெருவாக்கோட்டை கிராமத்தின் அச்சில் வைத்தே சுழற்றுகிறார். பத்துப் பதினைந்து மைல் தூரத்தைக் கடந்த செய்தி எதுவும் இதில் அதிகம் இல்லை . அதைத் தாண்டிய சில செய்திகளும்கூட அவர் பணி நிமித்தம் பல நாட்கள் தங்கி வாழ்ந்த பகுதிகள் பற்றியதே. ஒரே பார்வையில் கண்ட காட்சிகள் எதுவும் இதில் இல்லை. ஒரே ஒருமுறை கேள்விப்பட்ட செய்திகளையும் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு அசைபோட்ட செய்திகளாகத்தான் இவை இருக்க முடியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866